Wednesday, February 22, 2017

குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு: மார்ச் 20 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம்

குரூப் 4 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) வெளியிட்டுள்ளது
. தேர்ச்சி பெற்றோருக்கு மார்ச் 20-முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. குரூப் 4 தொகுதியில் இளநிலை உதவியாளர், வரித்தண்டலர் நிலை, நில அளவர், தட்டச்சர், வரைவாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை ஆகிய பதவிகளுக்கான 5,451 காலிப் பணியிடங்களுக்கான நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு 2016-ஆம் ஆண்டு நவம்பரில் நடந்தது. இதில் பங்கேற்ற 12,51,291 விண்ணப்பதாரர்களில் 11,50,396 பேரின் மதிப்பெண், தரவரிசை நிலை ஆகியன தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்களோடு, பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பொது தரவரிசை நிலை, வகுப்பு வாரியான தரவரிசை நிலை, சிறப்புப் பிரிவு விண்ணப்பதாரர்களுக்கான தனி தரவரிசை நிலை ஆகியனவெளியிடப்பட்டுள்ளன. இவற்றை தங்களது பதிவு எண்ணை உள்ளீடு செய்து தெரிந்துகொள்ளலாம். சான்றிதழ் சரிபார்ப்பு: இதையடுத்து, மார்ச் 20-ஆம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். விண்ணப்பதாரர்களின் தரவரிசை, காலியிட நிலை, இடஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படையில் கலந்தாய்வுக்கு பின்னர் அழைக்கப்படுவர்.
சான்றிதழ் சரிபார்ப்பின்போது, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தகவல் தவறானது எனத் தெரிய வந்தால், அவர்கள் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவோரின் பட்டியல் விரைவில் தேர்வாணைய இணையதளத்தில்(www.tnpsc.gov.in) வெளியிடப்படும். மேலும், அறிவிக்கையில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெறாதவர்களின் மதிப்பெண்களும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது என தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வி.சோபனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
TNPSC
tnpsc.gov.in

No comments:

Post a Comment